கனடாவில் விமானத்தில் குழப்பம் விளைவித்த பெண் கைது
கனடாவில் விமானம் ஒன்றில் குழப்பம் விளைவித்த பெண் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வெஸ்ட் ஜெட் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கல்கரியில் இருந்து ரொறன்ரோ நோக்கி பயணம் செய்ய விருந்த விமானத்தில் இவ்வாறு குறித்த பெண் குழப்பம் விளைவித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெஸ்ட்ஜெட் விமான சேவைக்கு சொந்தமான 670 என்ற இலக்கத்தைக் கொண்ட விமானத்தில் பயணிக்கவிருந்த பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தமாக இருக்க வேண்டிய பயணிகளின் எண்ணிக்கையை விடவும் அதிகமான பயணிகள் விமானத்தில் ஏறி இருந்தமை கண்டறியப்பட்டது.
குறித்த பெண் தங்களது ஆசனத்தில் வந்து அமர்வதாக பல பயணிகள் விமான பணியாளர்களிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்த விமான பயணிகளும் விமானத்திலிருந்து தரையிறக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த பெண் குழப்பம் விளைவித்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொலிஸார் கல்கரி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
பின்னர் ஏனைய பயணிகள் பாதுகாப்பாக விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.