கனடாவின் கிராமமொன்றில் ஏற்பட்ட தீ விபத்து; குடும்பம் எதிர்நோக்கும் சோகம்
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் கிராமமொன்றின் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
ஒன்றாரியோவின் பீவனாக் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த குடும்பம் 10 வயதான சிறுமியை மட்டும் இழக்கவில்லை, ஒட்டுமொத்த வீடுமே தீக்கிரையாகியுள்ளது.
அணிந்திருந்த ஆடைகள் தவிர வீட்டிலிருந்த எதனையுமே மீட்க முடியவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் மரணம் தொடர்பில் பழங்குடியின அமைச்சர் பெடி ஹஜ்டு தனது ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளார்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நன்கொடை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.