வரிச்சுமையை வாடிக்கையாளர் மீது சுமத்த விரும்பாத கனடிய நிறுவனங்கள்
கனடாவில் சில நிறுவனங்கள் வரிச் சுமையை வாடிக்கையாளர் மீது சுமத்துவதற்கு விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கனடா மற்றும் அமெரிக்கா இடையிலான வரி மோதல் தொடர்ந்து உக்கிரமடைந்து வரும் நிலையில், நுகர்வோரின் செலவுகள் அதிகரிக்கலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அதே சமயம், ஒன்டாரியோவில் சில நிறுவனங்கள், தங்களின் கூடுதல் செலவுகளை வாடிக்கையாளர்களுக்கு மாற்றாமல் தாங்களே தாங்கிக்கொள்வதாக அறிவித்துள்ளன.
கனடாவின் முன்னணி ஐஸ்கிரீம் நிறுவனங்களில் ஒன்றான Chapman’s Ice Cream (1973ஆம் ஆண்டு முதல் இயங்குகிறது) சில அமெரிக்கப் பொருள் வழங்குநர்களுடனான ஒப்பந்தங்களை முடித்து, பிற சர்வதேச நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய முயற்சி செய்து வருகிறது.
இந்த நிறுவனம், தற்போதைய செலவுகள் அதிகரித்தாலும், 2025ஆம் ஆண்டின் இறுதி வரை எந்தவித கூடுதல் கட்டணத்தையும் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புர்லிங்டன் Burlington பகுதியில் செயல்படும் Precision Record Pressing நிறுவனம் (வட அமெரிக்காவின் மிகப்பெரிய வினைல் (Vinyl) தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று) கூடுதல் கட்டணங்கள், மறைமுகச் செலவுகள் எதுவும் விதிக்கப் படாது என அறிவித்துள்ளது.
"நாங்கள் எந்த வாடிக்கையாளருக்கும் கூடுதல் கட்டணங்களை விதிக்கமாட்டோம்," என அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷவான் ஜோன்சன் CEO Shawn Johnson கூறியுள்ளார்.
இவ்வாறு சில நிறுவனங்கள் வரிச் சுமையை வாடிக்கையாளர் மீது திணிக்காது அந்த சுமையை தாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளன.
எனினும் நீண்ட காலத்திற்கு இந்த நடவடிக்கை சாத்தியமாகுமா என பொருளியல் நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.