கனடாவில் தட்டம்மை காரணமாக சிசு மரணம்
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் தென்மேற்குப் பகுதியில் பிறந்த ஒரு சிசு தட்டமை நோயினால் உயிரிழந்துள்ளனது.
பிறக்க முன்னதாகவே தனது தாயிடமிருந்து தட்டம்மை (measles) வைரஸ் தொற்று இந்தக் குழந்தைக்கு கடத்தப்பட்டிருந்தது.
அந்தக் குழந்தை தற்போது மரணமடைந்துள்ளதாக, மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கியேரன் மூர் கூறியுள்ளார்.
மரணமடைந்த குழந்தையின் தாய்க்கு தட்டம்மை எதிரான தடுப்பூசி போடப்படவில்லை.
குழந்தை குறை மாதத்தில் பிறந்த நிலையில் இருந்ததுடன், வைரஸ் தொற்றும் சேர்ந்து பல சிக்கல்களை ஏற்படுத்தியது என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தட்டம்மை வைரஸ் மரணத்துக்கும் மற்றும் குறைமாத பிரசவத்திற்கும் வழியமைத்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தைக்கு வைரஸ்க்கு அப்பாற்பட்ட பிற தீவிர மருத்துவ சிக்கல்களும் இருந்தன,” என டாக்டர் மூர் கூறினார்.
கடந்த 2023 அக்டோபரில் ஆரம்பமான புதிய பரவலால் ஒன்டாரியோவில் இதுவரை 2,009 தட்டம்மை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் பெரும்பாலானவை தென்மேற்குப் பகுதிகளில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.