ஒரே நாளில் நான்கு நோயாளிகளின் மரணத்திற்கு காரணமான கனேடிய மருத்துவர்
கிழக்கு ஒன்ராறியோ மருத்துவர் ஒருவர் ஒரே நாளில் நான்கு நோயாளிகளின் இறப்புக்கு காரணமானதாக நீதிமன்ற தரவுகளின் வாயிலாக தெரியவந்துள்ளது.
கிழக்கு ஒன்ராறியோவை சேர்ந்த மருத்துவரான பிரையன் நாட்லர் என்பவர் மீது ஏற்கனவே முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஹாக்ஸ்பரி மற்றும் மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 89 வயது ஆல்பர்ட் பாய்டிங்கர் என்பவரின் மரணத்திற்கு காரணமானதாக மருத்துவர் நாட்லர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, தொடர்புடைய மருத்துவமனையில் சந்தேகத்திற்டமளிக்கும் வகையில் நடந்த மரணங்களில் மருத்துவர் நாட்லருக்கு தொடர்புள்ளனவா என்பது தொடர்பில் விசாரிக்கப்படும் என அப்போதே பொலிசார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், தற்போது ஒரே நாளில் நான்கு நோயாளிகல் மரணமடைந்த விவகாரத்தில் மருத்துவர் நாட்லருக்கு தொடர்புள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆல்பர்ட் பாய்டிங்கர் இறந்த அதே நாளில் எஞ்சிய மூவரும் இறந்திருக்கலாம் என்றே பொலிசார் நம்புகின்றனர். ஆனால், இந்த கொலை வழக்குகளில் மருத்துவர் நாட்லருக்கு தொடர்பில்லை என்றே அவர் தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் மருத்துவர் நாட்லர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார், மேலும் இந்த வாரம் கைது செய்யப்பட்ட பின்னர் அதே நிபந்தனைகளின் கீழ் அவர் மீண்டும் விடுவிக்கப்பட்டதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.