கனடாவில் எரிபொருள் விலை மற்றொரு உச்சம் தொடும்
கிரேட்டர் ரொறன்ரோ பகுதி மற்றும் தெற்கு ஒன்ராறியோவின் பெரும்பாலான பகுதிகளில் எரிவாயு சராசரி விலை இந்த வார இறுதியில் புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமையில் மட்டும் இரண்டு சென்ட் அளவுக்கு எரிவாயு விலை உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது எனவும், இது லிற்றருக்கு 212.9 cents என இருக்கும் என்று கூறப்படுகிறது.
சனிக்கிழமை மேலும் 3 cents அதிகரித்து, எரிபொருள் விலை லிற்றருக்கு 215.9 cents என விற்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
கடந்த வார இறுதியில், எரிபொருள் விலையானது 214.9 cents என விற்கப்பட்ட நிலையில், இந்த விலை உயர்வு இன்னொரு உச்சமாகவே பார்க்கப்படுகிறது.
மக்கள் கோடை விடுமுறையை கொண்டாட இருக்கும் நிலையில், எரிபொருள் விலையுயர்வு கண்டிப்பாக பேரிடியாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்திருக்காது என்றே நிபுணர்கள் தரப்பு கூறுகின்றனர்.
அமெரிக்காவில், எரிபொருளின் சராசரி விலை ஒரு கேலன் $5ஐ நெருங்கியுள்ளது, அதே சமயம் இங்கிலாந்தில் எரிவாயு விலை லிற்றருக்கு 182.3 பென்ஸ் என்ற சாதனையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.