பண்டிகை காலத்தில் கனடாவில் தீவிர பொலிஸ் சோதனை!
பண்டிகை காலத்தில் கனடாவில் தீவிர பொலிஸ் சோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு இடங்களில் வாகனங்கள் சோதனை இடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக வீதி போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குடிபோதையில் வாகனங்களை செலுத்துவோரும் இந்த சோதனைகளின் போது கண்காணிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே சுமார் 1500 வாகனங்கள் இவ்வாறு நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளது.
குடிபோதை அல்லது போதைப்பொருள் பயன்பாட்டுடன் வாகனங்களை செலுத்துவோர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் 911 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.