வழி நெடுக பற்றியெரிந்த காட்டுத்தீக்கு நடுவே கனேடியர் செய்த துணிச்சலான செயல்
வழி நெடுக காட்டுத்தீ பற்றியெரிந்த நிலையிலும், தங்கள் பண்ணையிலுள்ள கால்நடைகளை காப்பாற்றுவதற்காக துணிச்சலுடன் செயல்பட்டுள்ளார் கனேடியர் ஒருவர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் பல இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்துகொண்டிருக்கும் நிலையில், சிறுவயதில் தான் வாழ்ந்த தனது தாத்தா வீட்டில் அமைந்துள்ள பண்ணையில் இருக்கும் கால்நடைகளை காப்பாற்ற உதவவேண்டும் என Adrian Chivers (24)இன் மாமா அவரை அழைத்துள்ளார்.
Coquihalla நெடுஞ்சாலை வழியாக நீண்ட தூரம் பயணித்து Adrian தன் மாமா வீட்டுக்குச் செல்லவேண்டும். வழியெல்லாம் சுமார் 70 முதல் 80 மீற்றர் வரை உயரம் கொண்ட மரங்கள் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்க, அவற்றின் ஊடாக பயணம் செய்துள்ளார் Adrian.
அந்த தீயின் வெப்பம் ட்ரக்கில் உணரப்பட, புகை வழியை மறைக்க, இரவில் பயணிப்பதுபோல, ட்ரக்கின் விளக்குகளை எரியவிட்டபடியே பயணித்துள்ளார் Adrian.
அவர் சென்று சேருவதற்குள் அவரது மாமாவே அனைத்து கால்நடைகளையும் வேறொரு இடத்துக்கு மாற்றியிருக்கிறார். ஆனால் Adrian அங்கு செல்லும்போது மீண்டும் அந்த இடத்திலிருந்தும் கால்நடைகளை வேறிடத்துக்கு மாற்றுமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
வேகவேகமாக நீண்டும் கால்நடைகளை வேறிடத்துக்கு மாற்ற முயல, சில கோழிகள் மற்றும் ஒரு பெண் குதிரையை மட்டும் காப்பாற்ற இயலாமல் போனதாக வருத்தத்துடன் தெரிவிக்கிறார் Adrian.