பிரான்ஸ் பரிசில் 27 அகதிகளை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு
பிரான்ஸ் பரிசில் இருந்து 27 அகதிகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பிராஸ் தகவல்கள் தெரிவிகின்றன.
பரிசில் உள்ள Gaîté Lyrique அரங்கில் கடந்த நான்கு மாதங்களாக நூற்றுக்கணக்கான அகதிகள் தங்கியிருந்த நிலையில், இரு நாட்களுக்கு முன்பாக அவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டிருந்தனர்.
அங்கிருந்த அகதிகளில் மொத்தமாக 150 பேர் வெளியேற்றப்பட்டனர். இதன்போது பாரிஸ் பொலிஸார் மீது மிக மோசமான தாக்குதல்களை அகதிகள் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், அவர்களில் 27 அகதிகளுக்கு Obligation to leave French territory - OQTF எனும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.