கொரோனா வைரஸின் தோற்றம் இதுதானா? சீன விஞ்ஞானியின் தகவலால் பரபரப்பு!

COVID-19 China
By Shankar Apr 10, 2023 08:40 PM GMT
Report

உலகையே பிதீயில் வைத்த கொரோனா பெருந்தொற்று முதன்முறையாக 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் யுகான் நகரில் கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரியவந்தது.

இருப்பினும், அதற்கு சில மாதங்களுக்கு முன்பே, சில ஐரோப்பிய நாடுகளில் கழிவுநீர் மாதிரிகளில் கொரோனா வைரஸின் இருப்பு கண்டறியப்பட்டது என கூறப்பட்டது.

கொரோனா வைரஸின் தோற்றம் இதுதானா? சீன விஞ்ஞானியின் தகவலால் பரபரப்பு! | Origin Of The Coronavirus Chinese Scientist

இருப்பினும், அந்த தகவல்கள் பரவலாக வெளிவராத நிலையில், பாதிப்புகளும் காணப்படாத சூழல் இருந்தது. ஒரு சில மாதங்களுக்கு பின்னர் சீனாவில், தொற்று கண்டறியப்பட்ட தருணத்தில் பல அலைகளாக பரவ தொடங்கி பல்வேறு நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது பல தொடர் சந்தேகங்களை கிளப்பியுள்ளது. உலக நாடுகளை 3 ஆண்டுகளாக பாதிப்பிற்கு உள்ளாக்கிய கொரோனா பெருந்தொற்றின் தீவிரம் பல நாடுகளில் இன்னும் குறையாமல் உள்ளது. அதன் நீண்டகால தாக்கம் மனிதர்களிடம் தொடர்ந்து காணப்படுகிறது.

கொரோனா வைரஸின் தோற்றம் இதுதானா? சீன விஞ்ஞானியின் தகவலால் பரபரப்பு! | Origin Of The Coronavirus Chinese Scientist

ஒருபுறம், சீனாவின் உகான் நகர ஆய்வகத்தில் இந்த வைரஸானது தோற்றுவிக்கப்பட்டுள்ளது என உலக நாடுகள் சந்தேகம் எழுப்பின.

ஆனால், இது எங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பிரசாரம் என கூறி சீனா அந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதுபற்றி உலக சுகாதாரஅமைப்பும் தனது விசாரணையை தொடங்கியது. நேரடி விசாரணையும் நடத்தியது. எனினும், போதிய தகவல் கிடைக்க பெறாமல் உள்ளது.

கொரோனா வைரஸின் தோற்றம் இதுதானா? சீன விஞ்ஞானியின் தகவலால் பரபரப்பு! | Origin Of The Coronavirus Chinese Scientist

கொரோனா வைரஸின் தோற்றம் பற்றி தங்களுக்கு என்ன விவரங்கள் தெரியுமோ, அவற்றை அனைத்து நாடுகளும் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்தியாவில் அண்மை நாட்களாக நாளாந்தம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தோற்றம் பற்றி பீஜிங் ரசாயன தொழில்நுட்ப பல்கலை கழகத்தின் பேராசிரியரான டாங் யிகாங் கூறும்போது,

சீனாவின் உகான் நகரில் ஹூவானன் கடல் உணவு சந்தையில் இருந்து வைரசின் மரபணு மாதிரிகள் எடுக்கப்பட்டதற்காக அது பெருந்தொற்று தோற்றத்திற்கான இடம் என நினைக்கின்ற அதேவேளையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமும் இதேபோன்ற ஒத்த மாதிரியான மரபணு தொடர்கள் இருப்பதனால், கொரோனாவானது மனிதர்களிடம் இருந்து தோன்றியிருக்க கூடும் என கூறியுள்ளார்.

கொரோனா வைரஸின் தோற்றம் இதுதானா? சீன விஞ்ஞானியின் தகவலால் பரபரப்பு! | Origin Of The Coronavirus Chinese Scientist

கொரோனாவின் தோற்றம் பற்றிய ஆய்வுக்கான சீன மாநில கவுன்சில் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் தொடர்ந்து பேசும்போது,

2020-ம் ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில், யுகான் உணவு சந்தையில் இருந்து 1,300-க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் உறைந்த விலங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு, 3 வைரஸின் தொடர்களை ஆய்வாளர்கள் பிரித்து எடுத்தனர்.

செய்தி நிறுவனம் தெரிவித்தது போன்று, கொரோனாவுக்கான தோற்றம் ரக்கூன், நாய்கள் என்பதற்கான சமீபத்திய ஆய்வுகளின் தரவுகளுக்கான போதிய சான்றுகள் இன்னும் கண்டறியப்படவில்லை என டாங் கூறியுள்ளார்.

இதேபோன்று, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்திற்கான ஆய்வாளர் ஜாவ் லெய் இதே நிகழ்ச்சியில் பேசும்போது, கொரோனா தோற்றம் பற்றி கண்டறிவதில் சர்வதேச விஞ்ஞானிகள் கூட்டாக செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனா வைரசானது முதலில் கண்டறியப்பட்டதற்காக அந்த இடத்தில் இருந்து அது தோன்றியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறியுள்ளார். இதனால், கொரோனாவின் தோற்றம் சீனா இல்லை என அந்நாட்டு ஆய்வாளர்கள் திட்டவட்டமுடன் மறுத்துள்ளனர்.

ஆய்வகத்தில் இருந்து கசிந்து இருக்க கூடும் என்ற கூற்றையும் ஜாவ் மறுத்து இருக்கிறார். அதற்கான சாத்தியமே இல்லை என அவர் கூறியுள்ளார்.

டாங்கின் கூற்றுப்படி கொரோனா வைரசானது மனிதர்களிடம் இருந்தே தோன்றியிருக்க கூடும் என கூறி, சீனாவுக்கு எதிரான உலக நாடுகளின் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ளார்.

அதனுடன், உகான் சந்தைக்கு மனிதர்களாலேயே கொரோனாவானது பரப்பி விடப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். விலங்குகளிடம் இருந்து பரவியதற்கான போதிய சான்றுகளும் இல்லை என கூறியுள்ளார்.

இருப்பினும், இன்னும் கொரோனாவின் தோற்றம் பற்றிய கண்டறிதலோ, அதனை பற்றிய முழுமையான புரிதலோ இல்லாத நிலையே நீடித்து வருகிறது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US