ஒட்டாவா இளைஞர் நீரில் மூழ்கி பரிதாப மரணம்
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள St. Lawrence ஆற்றில் சனிக்கிழமை மாலை ஒரு ஒட்டாவா இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
ஒன்ராறியோ மாகாண பொலிஸார் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
கிங்ஸ்டனுக்கு கிழக்கே 35 கிலோமீட்டரில் அமைந்த கனனொக்யூ (Gananoque) நகரை அண்மித்த பகுதியில், மாலை 6.30 மணியளவில் ஒரு நபர் நின்ற படகிலிருந்து தவறி கீழே விழுந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவத்தின் போது, அவர் எந்தவொரு உயிர்காப்பு அங்கியும் (Personal Flotation Device – PFD) அணியவில்லை எனவும், சில நிமிடங்களில் அவரை நீரில் மிதப்பதாகக் கண்டெடுத்தனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நிபியன் (Nepean) பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மீட்புப் படையினரின் மேன்மையான முயற்சிகளும் பயனளிக்கவில்லை எனவும் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது தனியுரிமையை மதித்து பெயர் வெளியிடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடற்கூறு பரிசோதனை (postmortem) மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், விசாரணை தொடருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மரணம், இந்த கோடைகாலத்தில் கிழக்கு ஒன்ராறியோ மற்றும் மேற்கு கெபெக் பகுதிகளில் ஏற்பட்ட பல நீரில் மூழ்குதல் சம்பவங்களில் ஒன்றாகும் என தெரிவிக்கப்படுகின்றது.