கனேடிய நகரமொன்றில் மறுசுழற்சி மையத்தில் மனித உடல் பாகங்கள்... பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
கனேடிய தலைநகரில் மறுசுழற்சிக்காக குவிக்கப்பட்டிருந்த குப்பைகளின் நடுவே மனித உடல் பாகங்கள் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று மதியம், Ottawaவிலுள்ள Sheffield Road என்ற பகுதியில் அமைந்துள்ள மறுசுழற்சி மையம் ஒன்றில் குவித்துவைக்கப்பட்டுள்ள குப்பைகளுக்கு நடுவே மனித கால் போன்று தோன்றும் ஒரு பொருள் கிடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை ட்விட்டரில் இது குறித்து தகவல் வெளியிட்ட பொலிசார், ஆனால், விசாரணை ஆரம்பகட்டத்தில்தான் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு பின்னர் கொலை வழக்குகளை விசாரிக்கும் பொலிஸ் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு எவ்வகையிலும் இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக தற்போதைக்கு எந்த தகவலையும் வெளியிடப்போவதில்லை என பொலிசார் தெரிவித்துள்ள நிலையில், விசாரணை தொடர்கிறது