பாகிஸ்தான் மசூதியில் வெடிகுண்டு தாக்குதல்: இதுவரை 46 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் இன்று வெடிகுண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலை பிற்பகல் தொழுகையின்போது தற்கொலைப்படை தீவிரவாதி நிகழ்த்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் போது அங்கிருந்தவர்களில் பலர் தூக்கி வீசப்பட்டனர். மசூதியின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக 17 பேர் உயிரிழந்த நிலையில், நேரம் செல்லச் செல்ல உயிரிழப்பு அதிகரித்தது.
இரவு நிலவரப்படி பலி எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது. சுமார் 150 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பொலிஸார்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் அந்த அமைப்பின் முக்கிய கமாண்டர் உமர் காலித் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அவனது சகோதரன் கூறியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான செய்திகள்
பள்ளிவாசல் ஒன்றில் பயங்கரமான குண்டு வெடிப்பு: 28 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு ; 25 பேர் பலி 120 பேர் காயம்