பிரான்ஸில் கடவுசீட்டு மற்றும் அடையாள அட்டை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
பிரான்ஸில் அடையாள ஆவணங்களைப் பெறுவதற்கான கால அவகாசம் அண்மைக்காலமாக கணிசமாக அதிகரித்துள்ளது.
பிரான்ஸில் விமானப் பயணத்தின் போது ஏற்படும் திடீர் சிரமங்கள் உட்பட பல நெருக்கடிகளை தீர்க்கும் புதிய நடைமுறை ஒன்று அமுலுக்கு வந்துள்ளது.
கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை தொடர்பான அதிகப்படியான சேவைகளால் நிர்வகிக்க மிகவும் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்களை அதிகரிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால் சில நகராட்சிகளில், ஆவணங்களைப் பெற இன்னும் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமைகளும் ஏற்பட்டுள்ளன. இந்த நெருக்கடிகளை கருத்திற் கொண்டு, நீண்ட காலத்திற்கு நிலைமையை மேம்படுத்த, அரசாங்கம் கடவுசீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டைகள் தொடர்பான தனிப்பட்ட தரவுகளின் செயலாக்கத்தை உருவாக்குவதற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
அதற்கமைய, ஒருவரது கடவுசீட்டு அல்லது அடையாள அட்டை காலாவதியாக உள்ளதென்றால் அது தொடர்பில் முன்கூட்டியே அந்த நபருக்கு அறிவிக்கும் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அந்த நபர் இறுதி நேரத்தில் சிக்கல்களில் சிக்கிக் கொள்வதற்கு பதிலாக முன்கூட்டியே அதற்கு தேவையான மாற்று நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ள முடியும். இந்த நடவடிக்கையினால் மக்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஆவணங்களை புதுப்பிக்க வேண்டியவர்களுக்கும் தாமதமின்றி ஆவணங்களை பெற எதிர்பார்ப்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக காணப்படும் என கூறப்படுகின்றது. இதனால் காத்திருப்பு நேரங்கள் குறையும் எனவும், பணியாற்றும் ஊழியர்களுக்கான நெருக்கடிகளையும் குறைக்கும் எனவும் கூறப்படுகின்றது.
அதற்கமைய, இனி வரும் நாட்களில் காலாவதியாகும் திகதியில் ஆவணங்கள் வைத்திருப்பவர்களுக்கு முன்கூட்டியே அதன் திகதி அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.