றொரன்டோ விமான நிலையத்தின் நூற்றுக் கணக்கான விமானப் பயணங்கள் ரத்து
றொரன்டோ விமான நிலையத்தின் நூற்றக் கணக்கான விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
றொரன்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையம் இவ்வாறு நூற்றுக் கணக்கான விமானப் பயணங்களை ரத்து செய்துள்ளது.
நகரை தாக்கிய கடுமையான பனிப் புயல் காரணமாக இவ்வாறு விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புதன்கிழமை புறப்படவிருந்த 26.9 வீதமான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதுடன் வருகை தரவிருந்த 28 வீதமான விமானப் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மொத்தமாக 225 விமானப் பயணங்கள் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன. தென் ஒன்றாரியோ பகுதியில் சுமார் 20 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானப் பயணங்கள் கால தாமதமாகலாம் எனவும், விமானப் பயணங்கள் ரத்து செய்யப்படலாம் எனவும் பியர்சன் விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.