ரஷ்ய படைகள் தொடர்பில் பென்டகன் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!
உக்ரைன் மீது படையெடுப்பதற்காக ஜனாதிபதி விளாடிமிர் புடின் அனுப்பிய போர் படையில் 10% க்கும் அதிகமானோரை ரஷ்ய இராணுவம் இழந்துள்ளதாக பென்டகன் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
இத்தகவலை பென்டகனின் மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்கிழமை தெரிவித்தார். கடந்த மாதம் 24 ஆம் திகதி தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போரில் முதன்முறையாக ரஷ்ய போர் படை 90%ஆக குறைந்துள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.
இது குறித்து பெயர் குறிப்பிடப்படாத அதிகாரி மேலும் கூறுகையில்,
உக்ரைன் மற்றும் அதைச் சுற்றியுள்ள 150,000 ரஷ்ய துருப்புக்களில் அனைவரும் போர் துருப்புக்கள் அல்ல என தெரிவித்த அவர், பல ஆதரவு செயல்பாடுகளை வழங்குகின்றவர்கள் அவர்கள் என்றும் கூறினார்.
இந்நிலையில் ரஷ்ய தரைப்படைகள் பெரும்பாலும் உக்ரைன் முழுவதும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக உக்ரைனின் தலைநகரான கிவ்வைச் சுற்றி, நகரின் மையத்திலிருந்து 10 மைல் தொலைவில் அவர்களின் படைகள் உள்ளதாக தெரிவித்த அந்த திகாரி, உக்ரேனிய எதிர்ப்பு படை சுறுசுறுப்பானது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் போரில் முதல்முறையாக அவர்கள், ரஷ்யர்களிடமிருந்து நிலத்தை மீட்டெடுக்க முயன்றதாகவும் அந்த அதிகாரிம் மேலும் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.