தண்ணீர் கேட்ட மக்கள் மீது துப்பாக்கிச்சூடு; ஐ.நா. சபை கண்டனம்

Sulokshi
Report this article
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை ஈரான் அரசு வன்முறையாக கையாண்டதற்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரானில் உள்ள குஜெஸ்தான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரிப்பால் நீர்நிலைகள் வறண்டு போய் காணப்படுகின்றன. இதனால் அங்குள்ள பொதுமக்கள் தண்ணீர் பற்றாக்குறையினால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து பகல் வேளையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டமானது கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. இதனால் ஈரான் அரசு போராட்டத்தை அடக்குவதற்கு சில கடுமையான முறைகளை கையாண்டுள்ளது. இந்த நிலையில் பொலிசாருக்கு பொதுமக்களுக்கும் நேற்று இரவு பயங்கர தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தியத்தில் 8 பேர் பலியானதாகவும் பலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் ஒன்றை தெரிவித்துள்ளது.
அதில் "அமைதி வழி போராட்டத்தில் ஈரான் அரசு வன்முறையை தூண்டியுள்ளதாக ஐ.நா. கூறியுள்ளது.