கடும் சீற்றத்தால் ஐவரை கொலை செய்த நபர்
டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள அயல் வீட்டில் இருந்த சிறுவன் உட்பட ஐவரை நபர் ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சான் ஜசிண்டோ நகரைச் சேர்ந்த 39 வயதான நபர், இரவு நேரத்தில் துப்பாக்கியால் சுட்டு விளையாடிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அயல்வீட்டார் தூங்கமுடியாமல் அவதியடைந்ததால், அந்த நபரை அழைத்துக் கண்டித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், பக்கத்து வீட்டுக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளியுள்ளார். அவரின் ஈவிரக்கம்மற்ற துப்பாக்கி சூட்டில் சிறுவன் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தப்பிச்சென்ற நிலையில் பொலிஸார் சந்தேக நபரை தீவிரமாக தேடிவருகின்றனர்.