வணிக வளாகத்தில் நகைகளை திருட சிலை போல் நின்ற வாலிபர்! இறுதியில் நடந்த சம்பவம்
போலந்து நாட்டில் கடை முன்பு சிலை போல் நின்று நகைகளை கொள்ளையடிக்க முயற்சித்த வாலிபர் ஒருவர் பாதுகாப்பு ஊழியர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் போலாந்து தலைநகர் வார்சா பகுதியில் ஒரு வணிக வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வாலிபர் கடையின் ஜன்னலுக்கு பின்னால் ஒரு பையை வைத்துக் கொண்டு சிலை போல் நின்றுள்ளார்.
அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அருகில் சென்ற போது அந்த வாலிபர் தனது உடைகளை மாற்றிக்கொண்டு அங்குள்ள கடை முன்பு அமைக்கப்பட்டிருக்கும் சிலைகளுக்கு மத்தியில் தானும் சிலை போலவே நின்று நடித்துள்ளார்.
இருப்பினும், அவரை பிடித்து விசாரித்த போது அவர் அங்குள்ள ஒரு நகைக்கடையில் நகைகளை திருடுவதற்கு திட்டமிட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது அவர் மற்றொரு வணிக வளாகத்தில் பொருட்களை திருடியதும் தெரியவந்தது.