ட்ரம்பை தாக்கப் போவதாக மிரட்டல் விடுத்தவர் கைது
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை தாக்கப் போவதாக மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் ஆயுதம் ஏந்திய ஒருவர், வெள்ளை மாளிகைக்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பயணித்த காரும் , திருடப்பட்ட வாகனம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்தின் (DHS) அறிக்கையின்படி, வெள்ளை மாளிகைக்கு அருகில் காரில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய வெனிசுவேலா நாட்டவரான ரொன்னி யோர்ட்ரிக்ஸ் குவானிபா கிரினோஸ் (Ronny Yordrix Guanipa Chrinos) என்பவரை அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.
விசாரணையில் தனது மனதுக்குள் ஒலிக்கும் குரல்கள் வொஷிங்டனுக்குச் சென்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை தாக்கப் போவதாக கூறியதாக அவர் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் பயணித்த காரில் பல ஆயுதங்கள் இருப்பதாகவும் சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், சந்தேக நபர் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவர் எனவும் உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.