ஸ்கார்பரோவில் பார் திறப்பு விழாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு குறித்து உரிமையாளர்கள் கவலை
ஸ்கார்பரோ நகரில் தி பைபர் ஆர்ம்ஸ் "The Piper Arms" என்ற மதுபான விற்பனை நிலைய திறப்பு விழாவில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து விற்பனை நிலைய உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருந்தது.
மூன்று ஆயுததாரிகள் பாருக்குள் நுழைந்து கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த, 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 7 வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றிருந்தது.
12 பேர் காயமடைந்தனர் – இதில் 7 பேர் நேரடியாக தோட்டாக்களால் தாக்கப்பட்டுள்ளனர், மற்றவர்கள் கண்ணாடி உடைப்பு காரணமாக காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய 3 சந்தேகநபர்களும் தப்பிச் சென்றுள்ளனர் – அவர்கள் குறித்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. The Piper Arms உரிமையாளர்கள், இது பற்றிய ஆழ்ந்த வருத்தத்தையும், துயரத்தையும் வெளிப்படுத்தி, அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
"இந்த துயரமான சம்பவம் எங்களை மனமுடைய வைத்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். அதிகாரிகள் மற்றும் மீட்பு பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டதற்கு நன்றியுடன் இருக்கிறோம் என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
"எங்கள் விருந்தினர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பே எங்கள் முதலாவது முன்னுரிமை. விசாரணையில் முழுமையாக ஒத்துழைக்கின்றோம், உயிரிழப்பு நிகழாதது ஒரு நிம்மதியாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.