திடீரென 26,000 அடி கீழே இறங்கிய விமானம் ; அச்சத்தில் உறைந்த பயணிகள்
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் JL8696 (போயிங் 737), ஜூன் 30 அன்று ஷாங்காயில் இருந்து டோக்கியோவிற்குப் 191 பயணிகளுடன் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென 26,000 அடி கீழே இறங்கியது.
20 நிமிடங்களில் 3,000 மீட்டருக்கு விமானம் வேகமாக கீழ்நோக்கிச் சென்றதால், ஆக்ஸிஜன் மாஸ்க்குகள் தானாக விழுந்தன. பயணிகளும் ஊழியர்களும் பீதியடைந்தனர். பயணிகள் சிலர் உயில் எழுதத் தொடங்கி, அன்பானவர்களுக்கு கடைசி செய்திகளை அனுப்பியுள்ளனர்.
விமானத்தின் கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு
பலர் இன்சூரன்ஸ் விவரங்களையும் வங்கி நம்பர்களையும் கூட எழுதி வைத்துள்ளனர். பதற்றமான சூழ்நிலையிலும், விமானம் ஒசாகாவில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
விமானத்தின் அழுத்தக் கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு ஏற்பட்டதே இதற்குக் காரணம் என்று ஜப்பான் போக்குவரத்து அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் பயணிகளுக்கு மன ரீதியான பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
Terrifying moments aboard a Spring Airlines Boeing 737 from Shanghai Pudong to Tokyo Narita — the flight experienced a sudden rapid descent mid-air! pic.twitter.com/Y1kwyorAUA
— Turbine Traveller (@Turbinetraveler) June 30, 2025