காப்பாற்றுங்கள்... ஆப்கான் இளம் பெண் தொடர்பில் கனேடிய பெண் ராணுவ வீரர் கோரிக்கை
ஆப்கானிஸ்தானின் கந்தஹார் பகுதியில் தம்முடன் பணியாற்றிய இளம் பெண்ணின் குடும்பத்தினரை காப்பாற்ற வேண்டும் என கனேடிய பெண் ராணுவ வீரர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.
கனடாவின் முன்னாள் ராணுவ வீரரான Charlotte Greenall ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் பணியாற்றிய காலகட்டத்தில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றியவர் Maryam Sahar.
இவரே தற்போது தமது குடும்பத்தினரை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை கனேடிய நிர்வாகத்திடம் முன்வைத்தவர். எங்களுக்கு போலி வாக்குறுதிகள் வழங்கப்பட்டன, குறிப்பாக ஆப்கான் பெண்களுக்கு, சிறுமிகளுக்கு என தெரிவித்துள்ள சஹார்,
கனடா உள்ளிட்ட நாடுகள் எங்களை ஏன் ஏமாற்றியது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 15 வயதாக இருக்கும் போது கனேடிய ராணுவத்திற்கு மொழி பெயர்ப்பாளராக பணியமர்த்தப்பட்டார் சஹார்.
ஆனால் இதற்காக தாலிபான்களின் அச்சுறுத்தலுக்கும் இலக்கானார் சஹார். தற்போது கனேடிய நிர்வாகத்தால் தாம் ஏமாற்றப்பட்டதாக உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
கனேடிய துருப்புகளுக்கு உதவ வேண்டாம், அவர்கள் தேவை முடிந்ததும் கைவிட்டு விடுவார்கள் என தாலிபான்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னதே தற்போது நிரூபணமாகியுள்ளது என்கிறார் சஹார்.
2011ல் நாட்டைவிட்டு வெளியேறிய சஹார், தற்போது கனேடிய குடிமகளாக உள்ளார். ஆனால் சஹாரின் இளம் வயது சகோதரரை கடத்திச் சென்ற தாலிபான், போதை மருந்துக்கு அடிமையாக்கியதுடன் சித்திரவதைக்கும் உள்ளாக்கியது.
தற்போது Charlotte Greenall சஹாரின் சகோதரை கனடாவுக்கு அழைத்துவர சில மாதங்களாக போராடி வருகிறார்.