கனடா பிரதமருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் சந்திப்பு
கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று மாலை எதிர்க்கட்சி கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ரே உடன் தனிப்பட்ட சந்திப்பு நடத்தவுள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் சந்திப்பு, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது. முன்னதாக, கார்னி இன்று ஒரு பல்கலைக்கழக மாணவர் குழுவிடம் உரையாற்றவுள்ளார்.
இவ்வுரை, அவரது லிபரல் அரசாங்கத்தின் முதல் வரவுச் செலவுத் திட்டத்தை முன்னிட்டு எடுக்கப்படவுள்ள கடினமான தீர்மானங்களை விளக்குவதாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
நவம்பர் 4 அன்று சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த வரவு செலவுத் திட்ட செலவுக் கட்டுப்பாடுகள் மற்றும் சில முக்கிய புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் இடம்பெறவுள்ளதாக அரசு முன்கூட்டியே அறிவித்துள்ளது.
கார்னி, இந்த உரையில் அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டம், அதன் இலக்குகள் மற்றும் கனடியர்களுக்கு வழங்கப்படும் உறுதிமொழிகளை விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அமெரிக்கா விதித்துள்ள சுங்க வரிகளால் (U.S. tariffs) கனடாவின் பொருளாதாரம் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இதனால் அரசாங்கம் நிதி திட்டமிடலில் கூடுதல் கவனத்தை செலுத்துகிறது.
மேலும், கார்னி இந்த வாரம் ஆசியாவில் நடைபெறும் பல பொருளாதார உச்சி மாநாடுகளில் கலந்துகொள்ளவுள்ளார். இவை நவம்பர் 4 வரவு செலவுத் திட்டத்திற்கு முன் நடைபெறவுள்ளன.