கனடிய சனத்தொகையில் வீழ்ச்சி
கனடிய சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்புடுகின்றது.
கடந்த ஜூலை முதல் ஒக்ரோபர் வரையிலான காலப் பகுதியில் நாட்டின் சனத்தொகை 76000த்தினால் குறைவடைந்துள்ளது.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

குடிவரவு கொள்கை
அரசாங்கத்தின் குடிவரவு கொள்கைகளின் காரணமாக சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் நிரந்தர வதிவுரிமையற்றவர்களின் எண்ணிக்கையில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வௌிநாட்டு மாணவர் எண்ணிக்கை குறைப்பு, வெளிநாட்டு பணியாளர்களின் வாழ்க்கை துணைக்கான தொழில் அனுமதி குறைப்பு போன்ற காரணிகளினால் இவ்வாறு சனத் தொகை வீழ்ச்சியடைந்துள்ளது.
கோவிட் பெருந்தொற்று காலத்தின் பின்னர் முதல் தடவையாக கனடாவில் சனத்தொகையில் பின்னடைவு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020ம் ஆண்டு நான்காம் காலாண்டு முதல் நாட்டின் சனத்தொகை வளர்ச்சி தொடர்ச்சியாக உயர்வடைந்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.