திருடிய எண்ணெய் வயல்களை ஒப்படையுங்கள் ; வெனிசுலாவுக்கு கெடு வைத்த டிரம்ப்!
வெனிசுலாவில் அமெரிக்கா உருவாக்கிய எண்ணெய் வயல்களை ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கெடு விதித்துள்ளார்
அமெரிக்கா , வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக போதைப்பொருட்களை கடத்தி வரும் கப்பல்களை தாக்கி அழித்து வருகிறது .

அதோடு வெனிசுலா நாட்டுக்கு எதிராக சில தடைகள் விதிக்கப்பட்டிருந்ததுடன் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை பதவி விலகுமாறு ட்ரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார் .
அமெரிக்காவிடம் இருந்து திருடிய எண்ணெய் , நிலம்
வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் , இருநாடுகளிடையே பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ள நிலையில் , வெனிசுலாவில் அமெரிக்கா உருவாக்கிய எண்ணெய் வயல்களை ஒப்படைக்க வேண்டும் என்று ட்ரம்ப் கெடு விதித்துள்ளார் .
அதுவரையில் வெனிசுலா நாட்டுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் தடை செய்யப்பட்ட மசகு எண்ணெய் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார் .வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அரசு , வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக மாறி வருகிறது .

எண்ணெய் வர்த்தகம் மூலம் நிதி திரட்டி , பயங்கரவாதம் , போதைப்பொருள் , மனிதக் கடத்தல் போன்ற செயல்களில் வெனிசுலா ஈடுபடுகிறது . அமெரிக்காவிடம் இருந்து திருடிய எண்ணெய் , நிலம் , மற்றும் பிற சொத்துக்களை வெனிசுலா ஒப்படைக்க வேண்டும் .
அதுவரையில் , வெனிசுலா நாட்டுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் தடை செய்யப்பட்ட மசகு எண்ணெய் கப்பல்கள் தடுத்து நிறுத்த உத்தரவிட்டுள்ளேன் தென் அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் , அதிகளவிலான கடற்படையினரால் வெனிசுலா முழுமையாக சுற்றி வளைக்கப்பட்டுள்ளது .
இதுவரையில் அவர்கள் பார்த்திடாத வகையில் இந்த விவகாரம் இன்னும் மேலும் விரிவடையும் , என டிரம்ப் கூறியுள்ளார்.