க்யூபெக் லிபரல் கட்சி தலைவர் பாப்லோ ரொட்ரிகஸ் பதவி விலகல்
க்யூபெக் மாகாண லிபரல் கட்சியின் சர்ச்சைக்குள்ளான தலைவர் பாப்லோ ரொட்ரிகோஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த ரொட்ரிகஸ், முன்னாள் லிபரல் நாடாளுமன்றத் தலைவர் மார்வா ரிஸ்கி நீக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து எழுந்த தொடர்ச்சியான சர்ச்சைகளால், தனது கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையை இழந்ததாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து, தனது தலைமைத் தேர்தல் பிரசாரத்தின் போது ‘வாக்குகளுக்குப் பணம்’ (cash-for-votes) குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் ரொட்ரிகஸ் சர்ச்சைகளை எதிர்கொண்டார்.

கட்சி தொடர்பில் விசாரணகைள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தாம் எந்த தவறும் செய்யவில்லை என்றும், உண்மை வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் ரொட்ரிகஸ் தெரிவித்திருந்தர்ர்.
இந்நிலையில், லிபரல் கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளது.
அந்தக் கூட்டத்திற்குப் பின்னர் ரொட்ரிகஸ் ஊடகவியலாளர்களைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.