எலான் மஸ்கின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த அதிபர் ஜெலன்ஸ்கி!
எலான் மஸ்கின்(Elon Musk) கருத்துக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் திகதி ரஷ்யா தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் அனைத்து தோல்வியடைந்த நிலையில், 9 மாதங்களாக போர் நீடித்து வருகிறது.
இதனிடையே உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர டெஸ்லா நிறுவனரும், தொழிலதிபருமான எலான் மஸ்க்(Elon Musk) யோசனை ஒன்றை கூறியிருந்தார்.
அதன்படி உக்ரைனில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் எலான் மஸ்கின்(Elon Musk) கருத்துக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் களத்திற்கு நேரடியாக வந்து, அங்கு ரஷியா ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை எலான் மஸ்க் பார்வையிட வேண்டும் எனவும், பின்னர் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து தனக்கு ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) கூறியுள்ளார்.