அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர் மோடி! வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) வரும் ஜூன் மாதம் 22 ஆம் திகதி அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நிலையில், இந்த பயணம் தொடர்பாக வெள்ளை மாளிகை வரவேற்பினை வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் இரண்டு நாடுகளிற்கு இடையிலும், அவற்றின் மக்களுக்கு இடையிலும் நெருக்கமான நட்புறவை மேம்படுத்தும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜூன் 22 ஆம் திகதி அதிபர் ஜோ பைடனும் (Joe Biden) அவரது மனைவியும் வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்க உள்ளனர் என்று அதிபரின் ஊடகச் செயலாளர், கரீன் ஜீன் பியரி அறிவித்துள்ளார்.
மேலும், இந்த சந்திப்பின் மூலம் இந்தோ பசிபிக் சுதந்திரமான வர்த்தகம், பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பாக இருக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.