இளவரசர் ஹாரிக்கு 10 வது வரிசையில் இடம் ஒதுக்கிய பிரித்தானியா!
மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் அவரது 2 வது மகனும் இளவரசருமான ஹாரிக்கு 10 வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது இங்கிலாந்து நாட்டின் அரசியாக நீண்டகாலமாக (70 ஆண்டுகள் என இறக்கும் காலம் வரை) இருந்தவர் இரண்டாம் எலிசபெத் ஆவார்.
இவர் கடந்தாண்டு செப்டம்பர் 8 ஆம் திகதி இயற்கை எய்தினார். ராணியாரின் மறைவை அடுத்து மறைவை அடுத்து இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக 3 ஆம் சார்லஸ் அரியணையின் ஏறினார்.
2000 பேருக்கு அழைப்பு
அரசருக்கான முடிசூட்டு விழா வரும் மே மாதம் 6 ஆம்திகதி நடைபெறவுள்ளது. முடிசூட்டு விழா பிரமாண்டமாக நடைபெறும் என்று பக்கிங்காம் அரண்மனை ஏற்கனவே அறிவித்தது.
விழாவில், அரச மரபுப்படி, சார்லஸ் கையில் செங்கோல், தடி ஆகியவவற்றை ஏந்தி அரியணையில் அமர்வார். முடிசூட்டு விழாவில் , உலகில் முக்கிய தலைவர் என 2000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சார்லசின் முடிசூட்டு விழாவில் அவரது 2 வது மகனும் இளவரசருமான ஹாரிக்கு 10 வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இளவரசர் ஹாரி அரச குடும்பத்தினர் மத்தியில் 10 வது வரிசையில் அமர்வார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த முடிசூட்டு விழா அடுத்த 3 நாட்களுக்கு நடக்கவுள்ள நிலையில், இளவரசர் ஹாரி, தந்தையின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பார் என்று தக்வல் வெளியாகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் தன் சகோதர் மற்றும் தந்தை சார்லஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.