டொமினிக்கன் குடியரசில் வெடித்து சிதறிய விமானம்; பயணித்தவர்கள் பலி
டொமினிக்கன் குடியரசில் உள்ள லா ரோமானா சர்வதேச விமான நிலையத்தில் (La Romana International Airport), டெக்சாஸின் ஆஸ்டின் (Austin) நகருக்குச் சென்றுகொண்டிருந்த கல்ஃப்ஸ்ட்ரீம் G200 (Gulfstream G200) ரக தனியார் ஜெட் விமானம் இன்று( 8) விபத்துக்குள்ளானது.
தீவிர இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது ஓடுபாதையில் மோதி தீப்பிடித்து வெடித்ததில், விமானி மற்றும் துணை விமானி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் விளக்கம்
டொமினிகன் குடியரசில் தனியார் விமானம் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறியதில் இரண்டு பேர் பலியாகினர். டொமினிகன் குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள லா ரோமனா சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து நடந்ததாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
சமூகஊடகங்களில் பரவி வரும் வீடியோவில், விமானம் டேக்-ஆஃப் செய்ய முயலும்போது, அதன் சக்கரங்கள் ஓடுபாதையில் மோதுவது தெரிகிறது.
இந்த விபத்தில் விமானத்தின் விமானி மற்றும் துணை விமானி பலியானதாக டொமினிகன் சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், விபத்து நடந்தபோது விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை. விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.