கனடாவில் சுரேன் ராகவனை சந்தித்தவர்களுக்கு வலுக்கும் எதிர்ப்புக்கள்
கனடாவில் இலங்கையின் வடமாகாண முன்னாள் ஆளுநரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவனை சந்தித்தவர்களுக்கு எதிர்ப்புக்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான சுரேன் ராகவன் இலங்கையில் தமிழின படுகொலை இடம்பெற்றதற்கு ஆதாராம் இல்லை என தெரிவித்திருந்தமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது. இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டத்தை கனடாவின் ஒன்றாறியோ நாடாளுமன்றம் நிறைவேற்றினால், இலங்கையில் நல்லிணக்க செயற்பாடு முற்றாக சீர்குலைந்து விடும் எனவும் சுரேன் ராகவன் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் குறித்த சட்டத்தை நிறைவேற்றக் கூடாதென கனடிய பிரதமர், ஒன்றாரியே பிரதமரை கேட்டுக் கொள்கிறேன் என்றும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் எமது தற்போதைய, எதிர்கால நல்லிணக்க செயற்பாடுகளை முற்றாக சீர்குலைத்து, சமூகங்களை பிளவுபடுத்தி விடும் எனவும் சுரேன் ராகவன் தெரிவித்திருந்தார்.
இதன் பின்னனியிலேயே கனடாவில் சுரேன் ராகவனை சந்தித்தவர்களுக்கு எதிர்ப்புக்கள் வலுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.