ரஷ்ய பொலிஸ்காரரை கீழே தள்ளிவிட்டவருக்கு 3 ஆண்டு சிறை
ரஷ்ய பொலிஸ்காரரை கீழே தள்ளிவிட்ட நெதர்லாந்து நாட்டவருக்கு ரஷிய கோர்ட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. நெதர்லாந்தை சேர்ந்த ஹெரி ஜானிஸ் வென் ஹுர்டன் ரஷியாவில் வசித்து வந்தார்.
இவர் கடந்த அக்டோபர் மாதம் மாஸ்கோவில் போலீஸ்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போக்குவரத்து சிக்னலுக்கு வைக்கப்பட்டிருந்த பலகையை உடைத்ததாக ஹெரியிடம் ரஷிய போலீஸ்காரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது, ரஷிய போலீஸ்காரரை ஹெரி கீழே தள்ளிவிட்டார். மேலும், அவரது முகத்தில் தாக்கினார். இதையடுத்து, ஹெரியை கைது செய்த ரஷிய போலீசார் அவரை மாஸ்கோவில் வீட்டு காவலில் வைத்ததுடன் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், போலீஸ்காரரை கீழே தள்ளிவிட்ட வழக்கில் ஹெரி ஜானிசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ரஷிய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த சம்பவம் ரஷியா, நெதர்லாந்து இடையேயான உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.