அமெரிக்காவில் புடினுக்கு வந்த சோதனை ; எரிபொருளுக்காக 2.2 கோடி ரொக்கம்
ஆகஸ்ட் 15 அன்று அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் ரஷிய அதிபர் புதின் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்திருந்தார்.
இந்தச் சந்திப்பு உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு ஒப்பந்தமும் இல்லாமல் முடிந்தது.
இந்நிலையில் புதின், தனது மூன்று ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப சுமார் 2.2 கோடி ரூபாயை ரொக்கமாக செலுத்த வேண்டியிருந்தது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
பேட்டி ஒன்றில் பேசிய அவர், ரஷியா மீது அமலில் இருக்கும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக அமெரிக்க வங்கிகளைப் பயன்படுத்த முடியாத காரணத்தினால், எரிபொருள் நிரப்புவதற்காக ரொக்கமாகப் பணம் செலுத்த வேண்டியிருந்தது என தெரிவித்தார்.