பிரான்ஸ் அதிபரிடம் எச்சரிக்கை தகவல் ஒன்றை பகிர்ந்த புடின்!
உக்ரைன் படைகள் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதி மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும், அதனால் பேரழிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் , ரஷ்ய அதிபர் புடின் (Vladimir Putin) , பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானிடம் (Emmanuel Macron) எச்சரிக்கை தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழுள்ள Zaporizhzhia நகரில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் தொடர்பில் ரஷ்யாவும் உக்ரைனும் மாற்றி மாற்றி ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதியுடனான (Emmanuel Macron) தொலைபேசி உரையாடல் ஒன்றின்போது, உக்ரைன் இராணுவம் அணுமின் நிலையம் அமைந்துள்ள Zaporizhzhia பகுதி மீது தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம் சாட்டிய புடின் (Vladimir Putin), அதனால் பெருமளவில் அழிவு ஏற்படலாம் என்றும், பெருமளவிலான பகுதிகளுக்கு அணுக்கதிர் வீச்சு அபாயம் ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளார்.
அதேவேளை உக்ரைனோ, Zaporizhzhia அணுமின் நிலையத்திலிருந்து உக்ரைனுக்கு மின்சாரம் செல்வதைத் துண்டித்துவிட்டு, அதை ரஷ்யாவுக்கு திருப்பிவிட ரஷ்யா முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.
Zaporizhzhia நகரம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டாலும், இன்னமும் அந்த அணுமின் நிலையத்தில் உக்ரைன் பணியாளர்களே பணியாற்றிவருகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.