சிறுவர்களுக்கு நூதன முறையில் தடுப்பூசி ஏற்றும் கனடா மாகாணம் ஒன்று!
கனடா மாகாணமான கியூபெக்கில் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் போது அவர்கள் அச்சமடைந்துவிடக் கூடாது என்பதற்காக நூதன முறையொன்று பயன்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் அச்சத்தை சிறார்களிடமிருந்தும் நீக்கும் நோக்கில் மெய்நிகர் ஆட்டங்கள் காண்பிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் அலங்காரம் செய்யப்பட்டு சிறுவர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மெய்நிகர் ஆட்டங்களை விளையாடிக் கொண்டிருக்கும் போது கொரோனா தடுப்பூசி ஏற்றப்படுவதனால் சிறார்கள் அச்சப்பட மாட்டார்கள் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.