கியூபெக்கில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு : அதிரடியாக மூடப்படும் பாடசாலைகள்!
கடந்த சில வாரங்களாக கனடாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால்
இந்த மாத தொடக்கத்தில் இருந்து அங்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகி வருகிறது. கியூபெக் மாகாணத்தில் இந்த வருடத்தின் முதற் தடவையாக 4,500ற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இன்றைய தினம் பதிவாகியுள்ளனர்.
கியூபெக் மாகாண அரசினால் கட்டுப்பாடுகள் மீள அமுல்படுத்தப்பட உள்ள நிலையில், கியூபெக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 4,507 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 490,294 நெருங்குகிறது.
கொரோனா வைரசால் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 11,642 ஆக உள்ளது.
கியூபெக்கின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவித்த கியூபெக் அரசாங்கம் திங்கட்கிழமை மாலை பார்கள், உணவகங்கள், சூதாட்ட விடுதிகள், திரையரங்குகள், உடல் பயிற்சி கூடங்கள் மற்றும் பாடசாலைகள் உட்பட பல பொது இடங்களை, கொரோனா வழக்குகள் அதிகரித்து வருகின்றன.
பார்கள், திரையரங்குகள், கலையரங்குகள், உடல் பயிற்சி கூடங்கள் மற்றும் ஸ்பாக்கள் ஆகியவை மாலை 5 மணி முதல் மூடப்படும் என்று சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டுபே அறிவித்தார்.
திங்கட்கிழமை முதல் உணவகங்கள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாடசாலைகள் எதிர்வருகின்ற ஜனவரி 10ம் திகதி வரை மூடப்படுவதுடன் ஜனவரி முதலாவது வாரத்தில் நேரலை வாயிலாக நடைபெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.