கனடாவிற்குள் நுழைய ராஜபக்ச சகோதரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!
இலங்கையின் முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவுக்கு முன்னாள் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக கனடா அரசாங்கம் தடைகளை விதித்துள்ளதாக இன்று வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி அறிவித்துள்ளார்.
இலங்கையில் நீடித்த கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் புரட்சி வெடித்ததை தொடர்ந்து, அங்கு ஆட்சியில் இருந்த ராஜபக்ச சகோதரர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பதவி விலகினர்.
ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச ஜூலையிலும், பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ச மே மாதமும் இராஜினாமா செய்தனர்.
இதையடுத்து ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.
இந்தநிலையில், இலங்கை முன்னாள் அதிபர்களான கோட்டாபய, மஹிந்த ராஜபக்ச உள்பட 4 பேர் கனடாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
As part of a historic decision, Minister @melaniejoly, has announced that ?? has imposed sanctions on the Rajapaksa brothers, along with two other state officials for their involvement in gross human rights violations in #SriLanka.
— Gary Anandasangaree (@gary_srp) January 10, 2023
? Full announcement: https://t.co/vlQlkLPELU https://t.co/Yzo9B8tvty pic.twitter.com/Efr03drmT3
மேலும் கனடாவில் உள்ள 4 பேரின் சொத்துக்கள் மற்றும் நிதி செயல்பாடுகள் முடக்கப்படும் என அறிவித்துள்ளது.
விடுதலை புலிகளுக்கு எதிரான போரின்போது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக 4 பேர் மீதும் கனடா நாடு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
?? has imposed sanctions against 4 Sri Lankan state officials responsible for gross and systematic violations of human rights.
— Mélanie Joly (@melaniejoly) January 10, 2023
These sanctions send a clear message: Canada will not accept continued impunity for those that have committed human rights violations in Sri Lanka. pic.twitter.com/cWYqxH4P7C
இதேவேளை, போர்க் குற்றவாளிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிரான கனேடிய தடைகள் குறித்து கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.