கனடாவில் பட்டபகலில் 3 பிள்ளைகளின் தாயாருக்கு நேர்ந்த கொடூரம்: துப்புத்துலங்காமல் திணறும் பொலிஸ்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பட்டப்பகலில் 3 பிள்ளைகளின் தாயார் குத்திக்கொல்லப்பட்ட விவகாரத்தில் இதுவரை துப்புத்துலங்காமல் பொலிசார் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Maple Ridge பகுதியை சேர்ந்தவர் 32 வயதான Ramina Shah. இவரையே ஜனவரி 27ம் திகதி மர்ம நபர்கள் கத்தியால் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமாகினர்.
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட Ramina Shah, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். தொழில்முனைவராக செயல்பட்டு வந்த Ramina Shah-ன் கொலையில் இதுவரை துப்புத்துலங்காமல் பொலிசார் திணறி வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
நீதிமன்ற தரவுகளில், பிரிட்டிஷ் கொலம்பிய அரசு ஒருமுறை ஷா மற்றும் அவரது முன்னாள் கணவர் பாபி ஆகியோருக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் வீட்டைப் பறிமுதல் செய்ய முயன்றதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், பாபி மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் மாகாண நிர்வாகத்தினரால் நிரூபிக்கப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது. 2015 முதல் 2018 வரையான காலகட்டத்தில் பாபி மீது பல்வேறு மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2018 மார்ச் மாதம் முன்னெடுத்த சோதனையில் ஏராளமான செல்போன்கள், தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மட்டுமின்றி, ஒரு போண்டியாக் உட்பட நான்கு வாகனங்களில் கிலோ கணக்கில் ஃபெண்டானில் மற்றும் சந்தேகத்திற்குரிய கோகோயின் போதை பொருளும் கைப்பற்றப்பட்டது.
ஆனால் இந்த விவகராம் அனைத்தையும் ஷா மற்றும் அவரது முன்னாள் கணவர் பாபி ஆகியோர் மறுத்துள்ளனர்.
ஷா கொல்லப்படுவதற்கும் 10 நாட்கள் முன்னர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட அவர், பழிவாங்கும் விஷயத்தில் கவனமாக இருங்கள் என குறிப்பிட்டிருந்தார்.