கனடாவில் ஸ்கை டைவிங் பயிற்றுவிப்பாளர் விபத்தில் சிக்கி பலி
கனடாவின் எட்மண்டனுக்கு மேற்கே அமைந்த ஒனொவே பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற வானிலிருந்து பாயும் (skydiving) பயிற்சியில் ஒரு பயிற்றுவிப்பாளர் உயிரிழந்துள்ளார்.
கனடிய காவல்துறையினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். 56 வயதான எட்மண்டன் பகுதியைச் சேர்ந்த அந்த நபர், விமானத்திலிருந்து பாய்ந்த பிறகு காயமடைந்து உயிரிழந்தார் என காவல்துறையின் கார்பரல் டிராய் சாவின்கொஃப் உறுதிப்படுத்தினார்.
அனைத்து விதத்திலும் அனுபவமிக்க ஒருவரே இந்த பயிற்றுவிப்பாளர் என ஸ்கைடைவ் வெஸ்ட் எட்மண்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மிக வேகமாக தரையிறங்க நேரிட்டதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த நபர் 3,000-க்கும் மேற்பட்ட ஸ்கைடைவ் அனுபவம் கொண்டவர் என்றும், ஸ்கைடைவ் வெஸ்ட் எட்மண்டன் குழுவின் ஒரு பிரியமான உறுப்பினர் என்றும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இந்த இழப்பு, கனடிய ஸ்கைடைவ் சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்," எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சந்தேகத்துக்குரியதல்ல, இது ஒரு விபத்தே எனத் தோன்றுகிறது காவல்துறையினர் தெரிவித்துள்னர்.
எனினும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.