கனடாவில் இந்த வகை பவர் பேங்க் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவிலும் அமெரிக்காவிலும் பவர் பேங்க் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈ.எஸ்.ஆர் ஹலோலொக் ESR HaloLock வயர்லெஸ் பவர் பேங்க் சில மாடல்கள் தீப்பற்றும் அபாயம் இருப்பதாக எச்சரித்து, சுமார் 58,000 சாதனங்களை திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளன. கனடிய சுகாதாரத் திணைக்களம் மற:றம் அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் என்பன இவ்வாறு உத்தரவிட்டுள்ளன.
நுகர்வோர் இணைய வழியில் மற்றும் ஈ.எஸ்.ஆர் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் கொள்வனவு சில பவர் பேங்க் மாடல்களை “உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி நிறுவனத்தை தொடர்பு கொண்டு நுகர்வோர், முழு பணத்தைத் திரும்பப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லித்தியம்-அயன் (Lithium-ion) பேட்டரி அதிக வெப்பமடைந்து தீப்பற்றும் அபாயம் இருப்பதாக கனடிய சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
திரும்பப்பெறப்பட்ட ESR HaloLock வயர்லெஸ் பவர் பேங்க் மாடல்கள்: • மாதிரி 2G520 – நிறங்கள்: கருப்பு, வெள்ளை, லைட் ப்ளூ • மாதிரி 2G505B – நிறங்கள்: கருப்பு, வெள்ளை, லைட் ப்ளூ, சாம்பல் • மாதிரி 2G512B – நிறங்கள்: டார்க் ப்ளூ, லைட் ப்ளூ, சாம்பல், வெள்ளை, கருப்பு • மாதிரி 2G505 – நிறங்கள்: கருப்பு, வெள்ளை
கனடாவில் 9 தீ விபத்து சம்பவங்கள் மற்றும் அமெரிக்காவில் 11 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சொத்து சேதம் ஏற்பட்டாலும் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.