மலேரியாவுக்கான இரண்டாவது தடுப்பு மருந்தை பயன்படுத்த பரிந்துரை
மலேரியாவைக் கட்டுப்படுத்தும் இரண்டாவது தடுப்பு மருந்தைப் பயன்படுத்த உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் இன்னும் மலிவான, திறன்வாய்ந்த தடுப்பு மருந்து உலக நாடுகளுக்குக் கிடைத்திருப்பதாக நிறுவனம் சொன்னது. புதிய R21 Matrix-M 3 தடுப்பு மருந்தை Oxford பல்கலைக்கழகம் உருவாக்கியது.
இதனை இந்தியாவின் சீரம் கழகம் தயாரித்துள்ளது. குழந்தைகளுக்கான மற்ற மருந்துகளைப் போலவே புதிய தடுப்பு மருந்தின் விலை இரண்டிலிருந்து நான்கு டாலர் வரை இருக்கும் என உலகச் சுகாதார நிறுவனம் கூறியது.
அதேவேளைபுர்க்கினா பாசோ, கானா, நைஜீரியா (Burkina Faso, Ghana, Nigeria) ஆகிய நாடுகளில் புதிய தடுப்பு மருந்துக்கு ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.