தொடர்ச்சியாக கருச்சிதைவு: மனமுடைந்த பெண் மேற்கொண்ட விபரீத முடிவு! சோக சம்பவம்
வடக்கு வேல்ஸில் பெண் ஒருவர் தொடர் கருச்சிதைவால் மனமுடைந்து தவறான முடிவை எடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நர்சரி ஊழியரான பணியாற்றிய பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குழந்தைகள் மீதான பற்றால் தாயாக வேண்டும் என்ற கனவில் இருந்தவர், தொடர் கருச்சிதைவு காரணமாக மனமுடைந்துள்ளார்.
வடக்கு வேல்ஸ் பகுதியில் குடியிருந்து வந்த 26 வயது Jemma Zoezee என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் திகதி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்துள்ள நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதை உறுதி செய்துள்ளதாக கடந்த வியாழக்கிழமை (25-04-2023) உறுதி செய்துள்ளனர்.
ஜெம்மாவும் அவரது கணவர் அந்தோனியோவும் ஒன்றாக வாழ்ந்து வாழ்ந்தனர்.
தனது மனைவி தொடர்பில் அந்தோனியோ தெரிவிக்கையில்,
எனக்குத் தெரிந்த மிக இனிமையான பெண் அவர். நீண்ட காலமாக உலகம் முழுவதும் பயணம் செய்ய விரும்புவதாகவும் ஜெம்மா கூறி வந்ததை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
ஆனால், தொடர்ந்து கருச்சிதைவு ஏற்பட்டதால், கடுமையான மனச்சோர்வில் அவர் இருந்தார் எனவும் விசாரணையில் அந்தோனியோ தெரிவித்துள்ளார்.
இப்படியான சூழலில் அவர் தமது வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை காலத்தில் ஜெம்மாவின் குடும்பத்தினர் எவரும் நீதிமன்றத்தில் கலந்துகொள்ளவில்லை.
ஜெம்மாவின் சகோதரர் தெரிவிக்கையில்,
முதல்முறை கருச்சிதைவு ஏற்பட்ட போதே அவர் மனமுடைந்து போனார் எனவும், அவருக்கு போதுமான உதவிகள் கிடைக்காமல் போனது என்றே தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவருக்கு ஏன் தொடர்ந்து கருச்சிதைவு ஏற்படுகிறது என்பதை எவரும் அவருக்கு விளக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார் ஜெம்மாவின் சகோதரர். அதுவே ஜெம்மாவை உளவியல் ரீதியாக கடுமையாக பாதிக்க செய்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.