வங்கியில் பணம் செலுத்த தயக்கம் காட்டும் மக்கள்: பிரபல வெளிநாடு ஒன்றின் அவல நிலை?
சீனாவில் சமீப காலமாக ஏற்பட்டு வரும் பொருளாதார மந்த நிலையினால் அந்நாட்டு வங்கிகளுக்கு 300 மில்லியன் டொலர் இழப்பு ஏற்படுமென தகவல் வெளியாகியுள்ளது.
சீன மக்கள் தங்கள் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க முடியாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கிகளில் பணத்தினை செலுத்தாமல் இருக்கிறார்கள். இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீன எவர்கிராண்ட் குரூப் எனும் நிறுவனம் அந்நாட்டின் மிகப்பெரிய வீட்டு வசதி மேம்பாடு நிறுவனம் ஆகும். இது ஜீலை மாதத்திற்குள் மறு கட்டடமைப்பு குறித்த திட்டத்தினை அறிவிப்பதாக கூறியிருந்தது.
ஆனால் அதுக்குறிப்பிட்ட நேரத்தில் செய்யதவறியதால் மக்களுக்கு அந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கை இழந்துள்ளது. எவர்கிராண்ட் நிறுவனத்திற்கு 300 மில்லியன் டொலர் கடன் இருப்பதாக சொல்லப்படுகிறது.
சீனாவின் 2 டிரில்லியன் யுவான் பணம் கட்டுமான தொடர்பான பணிகளில் தேங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. சீனாவின் வணிகத்தில் 80 சதவிதம் கட்டுமான தொழில்களில் தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.