தொலை தூரத்திலிருந்து சிகிச்சை அளித்து கனடிய மருத்துவர்கள் சாதனை
தொலைதூரத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி கனடிய மருத்துவர்கள் சாதனை நிலைநாட்டியுள்ளனர்.
டொராண்டோவின் புனித மைக்கல் மருத்துவமனயைின் மருத்துவக் குழு இந்த சாதனையை படைத்துள்ளுது. ரோபோக்களை தொலைவிலிருந்து கட்டுப்படுத்தி இந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுமார் 10 மூளை அஞ்சியோகிராம் சிகிச்சைகளை இவவ்ர்று வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. இது மருத்துவத்துறையில் ஒரு உலக முதல் சாதனை என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்த சாதனை எதிர்காலத்தில் தூர பகுதிகளில் — அவசர பக்கவாத சிகிச்சையை உடனடியாக பெறுவதற்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மூளை அஞ்சியோகிராம் என்பது மிகக் குறைந்த துளையீட்டுக்குரிய (minimally invasive) சிகிச்சை முறையாகும். மருத்துவர்கள் முன்புறத்திலிருந்து (groin) femoral artery-யில் கத்தீட்டரை நுழைத்து, அதை ரத்த நாளங்கள் வழியாக மூளைக்குச் செலுத்துகின்றனர்.
பின்னர் கொன்ஸ்ட்ராட் டை contrast dye ஊற்றி எக்ஸ் கதிர் மூலம் ரத்த நாளங்களில் பிரச்சினைகள் உள்ளதா என்பதை கண்டறிகின்றனர்.
ஆனால் இத்திட்டத்தில், டொக்டர் விடொர் மென்டாஸ் பெரய்ரா தொலை தூரத்தில் இருந்து கொண்டு ஒரு கணினி மூலம் ரோபோட்டை தூரத்திலிருந்து கட்டுப்படுத்தி கத்தீட்டரை மூளைக்கு வழி செலுத்தி சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.