டுவிட்டரில் போலி கணக்குகள் நீக்கம்: எலான் மஸ்க் விடுத்த எச்சரிக்கை
டுவிட்டரில் உள்ள போலி டுவிட்டர் கணக்குகள் தற்போது நீக்கப்பட்டு வருவதால் டுவிட்டரில் பின்தொடருபர்கள் எண்ணிக்கை குறையலாம் என அதன் உரிமையாளர் எலான் மஸ்க் (Elon musk) தெரிவித்துள்ளார்.
இதனால் டுவிட்டரில் பின்தொடருபர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் டுவிட்டரில் பயனர்கள் பதிவிடும் சராசரியாக 280 எழுத்துக்களை அல்லது உள்ளீடுகளை மட்டுமே டைப் செய்து அனுப்ப முடியும் வசதி தற்போது உள்ளது.
Twitter is purging a lot of spam/scam accounts right now, so you may see your follower count drop
— Elon Musk (@elonmusk) December 1, 2022
இந்த நிலையில், அதிகம் கருத்துகளை பயனர்கள் பதிவிட வசதியாக 1000 எழுத்துக்கள் வரை ஒரே டுவீட்டில் பதிவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோல, ஆப்பிள் பிளே-ஸ்டோரில் இருந்து டுவிட்டர் நீக்கம் செய்யப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.