வெளியேறிய பாலஸ்தீனியர்களை காசாவுக்குள் கண்ணியமாக அனுமதிக்க கோரிக்கை!
காசாவில் இருந்து வெளியேற்றப்பட்ட பாலஸ்தீனியர்கள் கண்ணியமான முறையில் திரும்பி வருவது உறுதி செய்யப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
செய்தி நிறுவனம் ஒன்றினால், கசிந்த ஆவணம் ஒன்றிற்கு அமைய இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, அழிவடைந்த பிரதேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஐரோப்பா பங்களிப்பை வழங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் அடுத்த வாரம் இஸ்ரேலிடம் கூற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பாலஸ்தீனியர்களுக்கு அவசிய உதவிகளை வழங்கி வரும் ஐரோப்பிய ஒன்றியம்,
2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன் முறையாக நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய இஸ்ரேல் சங்க சபையின் ஒரு பகுதியாக எதிர்வரும் 24 ஆம் திகதி பிரசல்சில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் இஸ்ரேலிய அதிகாரிகளிடம் தனது நிலைப்பாட்டை விளக்கவுள்ளது.