உயிருடன் புதைக்கப்பட்ட ஜெர்மனியர்களின் எச்சங்கள் மீட்பு!
முதலாம் உலகப் போரின் போது உயிருடன் புதைக்கப்பட்ட 200இற்கும் மேற்பட்ட வீரர்களின் எச்சங்கள் மீட்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் உலகப்போரின் போது பிரான்சின் வடகிழக்கு பகுதியில் உள்ள சுரங்கப்பாதைகயில் 200இற்கும் மேற்பட்ட ஜெர்மன் வீரர்கள் புதைக்கப்பட்டனர்.
இவ்வாறு புதைக்கப்பட்டவர்களின் எச்சங்களை மீட்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அது கடினமானது என கடந்த 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் நிரூபிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த எச்சங்களை மீட்காமல், அதனை போர் நினைவு சின்னமாக அறிவித்து, அரசின் பாதுகாப்பில் வைக்க ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் ஜேர்மனியின் கல்லறை ஆணையம் மற்றும் பிரஞ்சு அரசாங்கம் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.