பிரான்ஸ், சுவிஸ் நிறுவன சொத்துகளுக்கு கட்டுப்பாடு ; மேலைநாடுகளுக்கு புட்டினின் அதிரடி நடவடிக்கை

Vladimir Putin Ukraine Switzerland Russia
By Sahana Sep 21, 2026 03:55 PM GMT
Report

உக்ரைன் போருக்கு மேலைநாடுகள் வழங்கி வரும் ஆதரவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யாவில் செயல்பட்டு வரும் பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் சொத்துகளை தற்காலிக நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உணவு உற்பத்தி நிறுவனமான நெஸ்லே (Nestlé) மற்றும் பிரான்ஸைச் சேர்ந்த ஓச்சான் (Auchan), லெராய் மெர்லின் (Leroy Merlin) ஆகிய நிறுவனங்களின் ரஷ்ய துணை நிறுவனங்கள் தற்காலிக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ், சுவிஸ் நிறுவன சொத்துகளுக்கு கட்டுப்பாடு ; மேலைநாடுகளுக்கு புட்டினின் அதிரடி நடவடிக்கை | Restrictions Assets French Swiss Companies Putin

ரஷ்யாவின் சிவில் மற்றும் பொருளாதார உட்கட்டமைப்புகள் மீது உக்ரைன் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு ஆதரவளிக்கும் "நட்பற்ற நாடுகளின்" நிறுவனங்களை இலக்கு வைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் முல்லியெஸ் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ELO மற்றும் ADEO குழுமங்களின் கீழ் ஓச்சான் மற்றும் லெராய் மெர்லின் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

உக்ரைனுக்கு பிரான்ஸ் முக்கிய இராணுவ ஆதரவை வழங்கி வரும் நிலையில், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் வர்த்தக மையங்கள் மீதான உக்ரைனின் தாக்குதல்களுக்கு பிரெஞ்சு புலனாய்வுத்துறை வழிகாட்டுவதாகவும் சில செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, ரஷ்யாவுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளுக்கு சுவிட்சர்லாந்து ஆதரவளித்து வருகிறது.

மேலும், சுவிஸ் தயாரிப்பு ஆயுதங்களை உக்ரைனுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்தும் அந்நாடு பரிசீலித்து வருகிறது.

ரஷ்யாவில் லேமனா புரோ (Lemana PRO) என்ற பெயரில் இயங்கி வரும் லெராய் மெர்லினுக்கு, பிரான்ஸுக்கு அடுத்தபடியாக ரஷ்யா இரண்டாவது மிகப்பெரிய சந்தையாகக் காணப்படுகிறது.

பிரான்ஸ், சுவிஸ் நிறுவன சொத்துகளுக்கு கட்டுப்பாடு ; மேலைநாடுகளுக்கு புட்டினின் அதிரடி நடவடிக்கை | Restrictions Assets French Swiss Companies Putin

2025ஆம் ஆண்டில் அதன் உலகளாவிய வருமானத்தில் ரஷ்ய சந்தை சுமார் 18.5 சதவீத பங்களிப்பை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, நெஸ்லே ரஷ்யா நிறுவனத்தின் 2025ஆம் ஆண்டு வருமானம் சுமார் 258 பில்லியன் ரூபிள் (3.06 பில்லியன் அமெரிக்க டொலர்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த உத்தரவு தொடர்பாக தங்களுக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை என சம்பந்தப்பட்ட சில நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தங்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், வணிக நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவை கூறியுள்ளன.

ரஷ்யாவின் 2023ஆம் ஆண்டு சட்டக் கட்டமைப்பின் கீழ், வெளிநாட்டு நிறுவனங்களின் சொத்துகள் தற்காலிக நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டாலும், அந்த சொத்துகளின் மீதான கட்டுப்பாட்டை வெளிநாட்டு உரிமையாளர்கள் தற்காலிகமாக இழக்க நேரிடும்.

எனினும், உரிமை தன்னிச்சையாக முழுமையாக பறிபோகாது என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US