இலங்கையில் அரிசி தட்டுப்பாடை தவிர்க்க இதுவொன்று தான் வழி
துப்பாக்கி ஏந்தி நாடு முழுவதும் சோதனை மேற்கொண்டாலும் மக்களுக்கு போதுமான அரிசியை பெற்றுக்கொடுக்க முடியாத சூழல் உருவானத்துக்கு அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும் என அத்தியாவசிய உணவுப்பொருள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் அரிசி இறக்குமதிக்கான வரியை அரசாங்கம் 60 ரூபாயில் இருந்து 20 ரூபாவாக அரசாங்கம் குறைத்தால் அரிசியை இறக்குமதி செய்யா நாங்கள் தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர்கள் கூறுகையில்,
சந்தையில் அரிசிக்கு நிலவி வரும் தட்டுப்பாடு காரணமாக கீரி சம்பா கிலோ ரூ.225 ஆக விலை எகிறியுள்ளது. எனினும் அரசாங்கத்தினால் வரி குறைக்கப்பட்டால், இந்தியாவில் இருந்து கீரி சம்பா, பொன்னி சம்பாவை தட்டுப்பாடு இன்றி இறக்குமதி செய்ய முடியும்.
இதனால், 130 முதல் 135 ரூபாய்க்குள் மக்களுக்கு தேவையான அரிசியை விற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் உர நெருக்கடி காரணமாக எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் நாட்டில் அரிசி தட்டுப்பாடு தலை தூக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
நாட்டில் எந்த பகுதியில் எப்படி தேடினாலும் அரிசி தட்டுப்பாடும் தீர்வு காண முடியாது . அதே சமயம் நெருக்கடியை தடுக்க அரிசி இறக்குமதியை உடனடியாக தொடங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.